states

சர்வதேச லித்திய காங்கிரஸ்: சிலியும் பொலிவியாவும் நடத்துகின்றன

சாண்டியாகோ, ஏப். 18- வருங்காலத்தில் நாடுகளின் செல்வச் செழிப் பைத் தீர்மானிக்கும் என்று கருதப்படும் லித்தியம் குறித்த சர்வதேச மாநாட்டை நடத்த சிலி மற்றும் பொலிவியா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகள் முடிவு செய்துள்ளன. உலக அளவில் உள்ள லித்தியத்தின் இருப்பில் 50 விழுக்காட்டிற்கும் மேல் தென் அமெரிக்க நாடுக ளான சிலி, அர்ஜெண்டினா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளில் இருக்கிறது. உலக அளவில் 80 லட்சம் டன் லித்தியம் சிலியிலும், ஆஸ்திரேலியா வில் 27 லட்சம் டன்களும், அர்ஜெண்டினாவில் 20 லட்சம் டன்களும், சீனாவில் 10 லட்சம் டன்களும் உள்ளன. வருங்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரி பொருட்கள் என்ற கோட்பாட்டில் லித்தியம் முக்கிய மான இடத்தைப் பிடிக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

“லத்தீன் அமெரிக்காவின் பார்வையில் லித்தி யம்” என்ற தலைப்பில் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதி களில் காணொலி வாயிலாக ஒரு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொலிவியாவின் அமைச்சர் பிராங்கிளின் மோலினா, “மாற்று எரிபொருளை நோக்கி உலகம் செல்லும் போது சந்திக்க வேண்டிய சவால்கள் பற்றி எங்கள் நாடுகள் அறிந்தே உள்ளன. இதற்கு பெரும் அளவில் லித்தியத்தை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது” என்றார். லித்தியத்தின் பயன்பாடு பற்றி தங்கள் உரை யாடல்களைத் தொடர பொலிவியாவும், சிலியும் முடிவு எடுத்துள்ளன. நடப்பாண்டில் இதற்கான சர்வதேச மாநாட்டையும் இணைந்து நடத்தப் போகிறார்கள். இந்த மாநாட்டில் உலகம் முழுவதுமி ருந்து கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட் டோர் பங்கேற்கவிருக்கின்றனர். லித்தியம் எடுப்பது தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று பிராங்கிளின் மோலினா வலியுறுத்தியுள்ளார். ஒரு புதிய தேசிய லித்தியம் நிறுவனத்தை அமைக்க சிலியின் ஜனாதிபதி காப்ரியல் போரிக் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அமைச்சர் மார் சிலா ஹெர்னாண்டோ அறிவித்துள்ளார். அதோடு, ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்களும் அமைக்கப் படுகின்றன. தனது வளத்தை கொள்ளை போகா மல், வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்தப் போவதாக சிலியும், பொலிவியாவும் உறுதி தெரிவித்துள்ளன.