ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட் டுப்பாட்டுக் கோட்டு பகுதி யில் உள்ள ஒரு ராணுவ நிலை யில் பணியில் இருந்த பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் என்ற அக்னி வீரர் கடந்த அக்.11 அன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை செய் யப்படவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந் திய ராணுவம் தனது டுவிட்டர் எக்ஸ் வலைதளத்தில் கூறியி ருப்பதாவது: “தற்போதுள்ள நடைமுறைக்கு ஏற்ப, உயிரிழந்த அக்னி வீரரின் உடல் மருத்துவ மற்றும் சட்ட நடைமுறைகளுக் குப் பிறகு அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட் டது. ஆயுதப் படைகள், அக்னி பாதை திட்டத்தைச் செயல் படுத்துவதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ வீரர்களுக்கு உரிய பலன்கள் மற்றும் மரி யாதை தொடர்பாக வேறுபாடு காட்டியதில்லை. ஆயுதப்படை களில் துரதிர்ஷ்டவசமான தற் கொலை சம்பவங்கள் நிகழும் போது அந்த வீரரின் இறுதிச் சடங்கில் ராணுவ மரியாதை அளிக்கப்படுவதில்லை. கடந்த 2001 முதல் ஒவ்வொரு ஆண்டும் 100 முதல் 140 பேர் வரையிலான வீரர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த வீரர் களுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான உடனடி நிதி யுதவி உட்பட, குடும்பத்தின ருக்கு உரிய நிவாரணம் வழங் கப்படுகிறது. இதற்கு முன்னுரி மையும் அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.