states

1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கிறார்கள்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் தோ.வில்சன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் அனைவரையும் வரவேற்றார். ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சி ராணி, பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி, துணைத் தலை வர் பி.எஸ்.பாரதி அண்ணா, செயலாளர் பி.ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் வருமாறு:

உடனே உதவித்தொகை வழங்கிடுக!

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கென வரு வாய்த்துறை மூலம் வழங்கப்படுகிற உதவித் தொகை ரூ.1500/- கடும் ஊனமுற்றோருக்கு மாற்றுத்திறனாளி துறை மூலமாக வழங்கக் கூடிய ரூ.2000/- உதவித்தொகை கேட்டும் 2023 ஏப்ரல் முதல் விண்ணப்பித்து அதற்கான உத்தரவு பெற்றும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளிகள் கடந்த ஒரு  ஆண்டிற்கும் மேலாக மாதாந்திர உதவித்தொகை கிடைக்கா மல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுபற்றி தமிழக முத லமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பலமுறை கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பயனும் இல்லை. இதுபோன்ற பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்காக மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப் பட வேண்டிய மாநில வருவாய் நிர்வாக ஆணையர் தலைமை யிலான சி.ஆர்.ஏ கூட்டமும் கடந்த ஓராண்டாக நடைபெற வில்லை. எனவே, உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனே உதவித்தொகை வழங்கிட வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் உடனே வேலை வழங்கிடுக!

கடந்த பல ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலையுறுதி திட்டத்தில் வேலை செய்து வந்த மாற்றுத்திற னாளிகள் இந்த நிதியாண்டிலும் தங்களுக்கு வேலை வழங்கிடக் கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் முதலே ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பல ஆயிரம் பேர் மனு  அளித்து காத்திருக்கின்றனர். ஆனால் எந்தவொரு மாவட்டத்தி லும் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்னும் வேலை வழங்கப்பட வில்லை. மாற்றுத்திறனாளிகள் செய்வதற்கரிய கடினமான வேலைகள்தான் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறி மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் தற்போது வேலை வழங்குவதை தவிர்த்து வருகின்றனர். இது மிகுந்த கண்டனத்திற்குரியது. எனவே, இத்திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் உடனே வேலை வழங்குவதோடு, அவர்கள் செய்வதற்குரிய - ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 மணி நேர வேலை, இலகுவான வேலை, முழு ஊதியமும் வழங்கிட வேண்டும். ஏஏஒய் குடும்ப அட்டை உடனே வழங்கிடுக! மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கிய குடும்பத்தினரை வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாக கணக்கிட்டு அவர்களுடைய குடும்ப அட்டைகளை  ஏஏஒய் குடும்ப அட்டை களாக மாற்றி அவர்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா  (AAY) திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கிட வேண்டும் என தில்லி உயர்நீதிமன்றம் மத்திய - மாநில அரசு களை வலியுறுத்தியது. அதன்படி, தங்களது குடும்ப அட்டை களை ஏஏஒய் குடும்ப அட்டைகளாக மாற்றித்தர கேட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி களுக்கு, அவ்வாறு மாற்றி வழங்கப்படாமல் உள்ளது. எனவே அவற்றை உடனடியாக மாற்றி வழங்கி அதற்கான இலவச உணவு தானியங்களும் உடனே வழங்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் மேற்கூறிய மூன்று கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி ஜூலை 16 அன்று, பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.


 

;