states

img

காங்கிரஸில் இருந்து கே.வி.தாமஸ் நீக்கம்

ஜெய்ப்பூர், மே 13- காங்கிரஸ் மூத்த தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான கே.வி.தாமஸ் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கேபிசிசி தலைவர் கே.சுதாகரன் ஜெய்ப்பூரில் தெரிவித்துள்ளார். திருக்காக்கரை இடைத்தேர்தலையொட்டி எல்டிஎப் நடத்திய பிரச்சார தொடக்க விழாவில் கே.வி.தாமஸ் பங்கேற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எனவும், இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி கமிட்டியின் அனுமதி உள்ளது எனவும் சுதாகரன் கூறினார். இதுகுறத்து கே.வி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காங்கிரஸில் இருந்து தான் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஏஐசிசிதான் தன்னை நீக்க வேண்டும். கேபிசிசி தலைவர் பொய் சொல்கிறார் என்று கூறினார்.