states

img

சத்தீஸ்கரில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி    

சத்தீஸ்கரில் சாலை விபத்தில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

சத்தீஸ்கர் தோதோய் சௌக் அருகே உள்ள பஞ்சதேவரியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு பின்னர் ஒரு வாகனத்தில் சிலர் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கந்தாய் கிராமத்திற்கு அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே கால்நடை கூட்டம் வந்துள்ளது. இதைக்கண்ட ஓட்டுநர் வாகனத்தை சாலையிலிருந்து கீழே இறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.     

இதனால் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலிருந்த கந்தாய் சமூக சுகாதார நிலையத்திற்கும், மாவட்ட மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டன. அங்கு  புவன் ஜோஷி(65), சர்ஜு டாண்டன்(21) மற்றும் ராஜ் டாண்டன் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  மேலும் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

இதை அறிந்த போலீசார் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279-ன் படி பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல், 337-ன் படி மற்றவர்களின் உயிருக்கோ தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.