கொச்சி, ஜன.18- கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் வளர்ச்சி நாட்டிற்கு கேரளாவின் பங்களிப்பு என்றும், ரூ.4000 கோடி மதிப்பிலான இரண்டு கப்பல் போக்குவரத்துத் திட்டங்கள் உட்பட மூன்று திட்டங்கள், கேரள மண்ணில் செயல்படுத்தப்படவுள்ளன என்றும் இது கப்பல் துறையில் கொச்சியின் இருப்பை உணர்த்துவதாக உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டின் புதிய உலர் கப்பல்துறை, சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் வசதி (ISRF) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் எல்பிஜி இறக்குமதி முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உலர் கப்பல்துறை கேரளாவின் தாராள ஆதரவிற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கேரளாவின் சிறந்த ஆதரவுக்கு அவை சிறந்த எடுத்துக்காட்டு. மேக் இன் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கேரளாவில் தயாரிக்கப் பட்டது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.
இது இந்தியா மட்டு மின்றி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1,799 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய உலர் கப்பல்துறை, கடல்சார் துறையில் இந்தியாவின் பொறியியல் திறமை மற்றும் திட்ட செயலாக்க நிபுணத்து வத்தை வெளிப்படுத்துகிறது. இது இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய உலர் கப்பல்துறை மற்றும் மிகவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.
வில்லிங்டன் தீவில் உள்ள 42 ஏக்கர் நிலத்தை கொச்சி துறை முக ஆணையத்திடம் இருந்து குத்த கைக்கு எடுத்து ரூ.970 கோடி செலவில் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை ஐஎஸ்ஆர்எஃப் அமைத்துள்ளது. கொச்சியில்ரூ.1,236 கோடி செல வில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷ னின் புதிய எல்பிஜி இறக்குமதி முனை யம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுஎன்றார்.