states

img

ஈரானுக்கு உடல் உறுப்புகள் கடத்தல் முக்கிய குற்றவாளி கொச்சியில் கைது

கொச்சி, மே 26- இந்தியாவில் இருந்து ஈரா னுக்கு உடல் உறுப்புகள் கடத் தப்பட்ட வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் கைதான சஜித் ஷியாம் தான் நிதிப் பரிமாற்றம் செய்தவர் என்  பது தெளிவாகி உள்ளதாக கேரள  மாநிலம் கொச்சி மாவட்ட காவல்  துறை எஸ்பி வைபவ் சக்சேனா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மனித உறுப்புகள் கடத்தல் குறித்து அறிவியல் ரீதியாக விசா ரணை நடந்து வருகிறது. மேலும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மோசடி கும்பல் செயல் படும் ஹைதராபாத், பெங்களூரு மற்றும் தில்லியில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இவ்வழக்கில் மே 24 வெள்ளி யன்று கைது செய்யப்பட்ட எத்த லையைச் சேர்ந்த சஜித் ஷியாம்  என்பவரை அங்கமாலி ஜூடி சியல் முதல் வகுப்பு மாஜிஸ்தி ரேட் நீதிமன்றம் சிறையில் அடைத்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட சபித் நாசரின் நண்பர் சஜித் ஷியாம். இவர் களுக்கு இடையே பல லட்சம் ரூபாய் நிதி பரிமாற்றம் நடந்துள் ளது. சபித் நாசரை காவலில் எடுத்த பிறகு இருவரிடமும் விசா ரணை நடத்தப்படும். ஆலுவா டிஎஸ்பி பிரசாத் தலைமையில் விசாரணை நடைபெற்று வரு கிறது.

;