states

முதல் கட்டமாக 30,000 அரசு நிறுவனங்கள்; 14,000 வீடுகளுக்கு இணையம்

திருவனந்தபுரம், ஜுன் 4- அனைவருக்கும் இணையம் என்ற நோக்கத்துடன் கேரள அரசு  செயல்படுத்தி வரும் கே-போன்  திட்டம் திங்களன்று (ஜூன் 5) நடைமுறைக்கு வருகிறது. மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை கட்டடத்தில் உள்ள சங்கரநாரா யணன் தம்பி உறுப்பினர்கள் அரங்கில் நடக்கும் விழாவில், கேரளாவின் பெருமைமிக்க திட்டத்தை நாட்டிற்கு முதல்வர் பின ராயி விஜயன் வழங்குகிறார். திட்டத்தின் முதல் கட்டத்தில், 30,000  அரசு நிறுவனங்களையும், ஒரு  சட்டமன்றத் தொகுதியில் உள்ள  100 வீடுகள் என 14,000 வீடுகளை யும் கே-போன் இணையம் சென்றடையும். கேரளாவில் பொருளா தாரத்தில் பின்தங்கிய சுமார் 20  லட்சம் குடும்பங்களுக்கு கே ஃபோன் மூலம் இலவச இணைய  சேவையையும் மற்றவர்களுக்கு மிதமான விலையிலும் வழங்கு வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 18,000 அரசு நிறுவனங்களுக்கு கே-போன் மூலம் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. கே ஃபோன் ஏற்கனவே சுமார் 40 லட்சம் இணைய இணைப்புகளை வழங்கும் திறன் கொண்ட தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை செய்துள்ளது. இதற்காக 2519 கி.மீ ஓபிஜிடபிள்யூ கேபிளிங்கும், 19118 கி மீ ஏடிஎஸ்எஸ் கேபிளிங்கும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கே ஃபோன்-இன் இயக்க  மையம் கொச்சி இன்ஃபோபார் க்கில் அமைந்துள்ளது. முன்ன தாக, இந்தத் திட்டமானது உள்கட்ட மைப்பு சேவைகளை வழங்கு வதற்கான வகை 1 உரிமத்தையும் அதிகாரப்பூர்வமாக இணைய சேவைகளை வழங்குவதற்கான இணைய சேவை வழங்குநர் (ISP)  பிரிவு B ஒருங்கிணைந்த உரிமத்தை யும் கொண்டுள்ளது. ஜூன் 5 அன்று  நடைபெறும் மாநில அள விலான துவக்க விழாவின் பகுதி யாக தொகுதி வாரியான நிகழ்ச்சி களுக்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

;