விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேரள பட்ஜெட்டை நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் இன்று தாக்கல் செய்தார்.அவர் குறிப்பிடுகையில் ஒன்றிய அரசின் நிதிக் கொள்கை கேரளாவின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது என்றார்.
இதனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு வறுமை ஒழிப்புக்கு ரூ.50 கோடியும் மேக் இன் கேரளா திட்டத்திற்காக ரூ.100 கோடியும், மீன்வளத்துறைக்கு ரூ.321.31 கோடியும், ரப்பர் விவசாயிகளுக்கு உதவுவதற்க்காக ரூ.600 கோடி மானியமும் வழங்கப்பட்டுள்ளது. விழிஞ்ஞத்தை துபாய் போல வர்த்தக துறைமுக நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் .அரசின் மேலும் பல சேவைகள் ஆன்லைன் ஆக்கப்படும் என்றும் கூறினார்.