states

img

அவசரநிலை போராளி கொடியேரி பாலகிருஷ்ணன்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (68) சென்னையில் சனியன்று (அக்.1) காலமானார்.புற்று நோயால் பாதிக்கப்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

வாழ்க்கை குறிப்பு
1953-ஆம் ஆண்டு கொடியேரியில் உள்ள மோட்டும்மாளைச் சேர்ந்த கீழ்நிலைப் பள்ளி ஆசிரியர் குஞ்சுண்ணி குருப்பிற்கும், நாராயணி அம்மாவிற்கும் பிறந்த கொடியேரி பாலகிருஷ்ணன், கொடியேரியில் உள்ள ஜூனியர் பேஸிக் பள்ளி மற்றும் ஓனியன் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். மாஹேயில் உள்ள கல்லூரி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் படித்தவர். ஓனியன் அரசு உயர்நிலைப் பள்ளியில் கேரள மாணவர் கூட்டமைப்பு (கேஎஸ்எஃப்) -- இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ)-ன் முதல் கிளையை  நிறுவி அதன் செயலாளராக ஆனதன்  மூலம்  அரசியலில் அறிமுகமானார். 

அப்போது அவர் ஒன்பதாம் வகுப்பு மாணவராக இருந்தார். 1970-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். எங்கயில் பீடிகை பகுதி கிளைச் செயலாளராகவும், அதே ஆண்டு மகாத்மா காந்தி கல்லூரி மாணவர் யூனியன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற  மாணவர் சங்க அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டார். இது 1970 டிசம்பரில் எஸ்.எஃப்ஐ உருவாக வழிவகுத்தது. 

மிசா கைதி 
1975-ஆம் ஆண்டு அவசரநிலையின் போது 16 மாதங்கள் மத்திய சிறையில் உள்நாட்டு பாதுகாப்புச் பராமரிப்பு சட்டத்தின் (மிசா) கீழ் கோடியேரி சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்பு எஸ்.எஃப்ஐ- ன் தேசிய இணைச் செயலாளராகவும் செயல்பட்டார். கொடியேரி 1980-82 காலகட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கண்ணூர் மாவட்டத் தலைவராக இருந்தார். 1988 ஆம் ஆண்டு ஆலப்புழாவில் நடைபெற்ற சிபிஎம் கட்சி மாநாடு அவரை அதன் மாநிலக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது. 1990-95 காலகட்டத்தில் கண்ணூரில் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார்.
1995 ஆம் ஆண்டு கொல்லம் மாநில மாநாட்டில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினராக  கொடியேறி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சி காங்கிரஸ் அவரை மத்திய குழுவிற்குத் தேர்ந்தெடுத்தது. 2008ல் கோயம்புத்தூரில் நடந்த கட்சி மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அவர் இறக்கும் வரை அந்தப் பதவியில் இருந்தார்.
 கொடியேரி, கேரள விவசாயிகள்  சங்கத்தின் மாநில இணைச் செயலாளராகவும், பொருளாளராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;