states

img

40 சதவிகிதத்திற்கும் குறைவாக வருகைப்பதிவு இருந்தால் கல்வி நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்

திருவனந்தபுரம், ஜன.27- கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமை யில் நடைபெற்ற கோவிட் ஆய்வுக் கூட்டத் தில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாண வர்களின் வருகை 40 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால், இரண்டு வாரங்க ளுக்கு கல்வி நிறுவனத்தை மூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கோவிட் பரவலைக் கணக்கிட ஏ பி சி வகைப்பாடு ஜனவரி 25 செவ்வாய் முதல் அமலுக்கு வருகிறது. பெருமூளை வாதம் (செரிப்ரல் பால்சி), மன இறுக்கம் (ஆட்டிசம்) கொண்ட குழந்தையின் பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை மூலம் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார். மாநிலத்தில் கோவிட் பரவல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் சி பிரிவில் இடம் பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாவட் டத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும், உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கி ணைத்து கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார். கேரளத்தில் 83 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப் பட்டது.

ஆனால் காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு மற்றும் இடுக்கி மாவட்டங்கள் மாநில சராசரியை விட குறைவாக உள்ளன. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் மாநில சராசரி 66 சதவிகிதம் ஆகும். இருப்பி னும், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களின் தடுப்பூசி சராசரி, மாநில சராசரியை விட குறைவாக உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி, இரண்டாவது டோஸ் தடுப்பூசி மாநில சராசரியை விட குறைவாக உள்ள  மாவட்டங்கள் சிறப்பு தடுப்பூசி இயக்கத் திற்கு உட்படுத்தப்பட வேண்டும். டயாலி சிஸ் தேவைப்படும் கோவிட் நோயாளிக ளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் வசதி களை ஏற்படுத்துமாறு சுகாதாரத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். மாவட்டங்களின் தேவைக்கேற்ப டயாலிசிஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் பணிக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சரிபார்க்க முதல்வர் உத்தரவிட்டார். சுகாதாரத் துறையும் உள்ளாட்சித் துறையும் இணைந்து ரேப்பிட் ரெஸ்பான்ஸ் டீம்களுக்கான (ஆர்ஆர்டி) பயிற்சித் திட்டம் ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்ஆர்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 60,000 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். இ-ஜாக்கிரதா போர்ட்டலில் சரியான நேரத்தில் தகவல்களை வழங்குவது மிக முக்கியம். மருத்துவமனைகள் ஆக்சிஜன் குறித்த தகவல் மற்றும் படுக்கைகள் சரி யான நேரத்தில் வழங்க வேண்டும். கோவிட் தொற்று ஏற்பட்டால் சுகாதாரத் துறை சிறப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளும். கோவிட் பெருந்தொற்று பரவல் காலத்தில் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை செயல்படுத்தும். ஜனவரி 26 ஆம் தேதி ஆன்லைன் பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்படும். வீட்டிலேயே சிகிச்சையில் உள்ளோர், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் கோவிட் தொடர்பான பிற முக்கிய பரிந்துரைகளை வழங்கும் திட்டத்தில் குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளை அனுமதிக்காத தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அறிவுறுத்தப்பட்டது. ஆய்வகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகபட்ச சோதனைகள் செய்வது நல்லது. பயிற்சி இல்லாமல் வீட்டிலேயே சுய பரிசோதனை செய்வது பெரும்பாலும் தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கிறது என்பது கவனத்துக்கு வந்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள மின்னணு (இ) அலுவலகம் வரும் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தரம் உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையான அமைப்பை ஏற்படுத்துமாறு தலைமைச் செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

;