states

img

கேரளத்திற்கு வருகை தந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள்!

கேரளத்திற்கு வருகை தந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுக்கு சிபிஎம் தலைவர்கள் வரவேற்றனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு, திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஎம் கேரள மாநில தலைமையகமான AKG மையத்திற்கு வருகை தந்தது. சீன தூதரகத்தின் துணைத் தலைவர் ஹீ மெங், தூதரகத்தில் அரசியல் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் சோ குவோஹுய் மற்றும் அரசியல் கட்சி விவகாரங்களைக் கையாளும் இரண்டாவது செயலாளர் குவோ டோங்டாங் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களை கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், மத்தியக் குழு உறுப்பினர்கள் C.S.சுஜாதா, TP.ராமகிருஷ்ணன், K.S.சலீகா, புத்தலத் தினேசன் ஆகியோர் வரவேற்றனர்.