states

img

“கேரளா ஸ்டோரி” (VS) “மணிப்பூர் ஸ்டோரி”

பிரதமர் மோடியின் பாஜக அரசு  கடந்த 10 ஆண்டுகளில் மக்க ளுக்காக எதுவும் செய்யாத நிலையில், மக்களவை தேர்தல் பிரச்  சாரத்தில் “மோடி அண்ட் கோ” சாதனை என்ற வார்த்தைகளை உதிர்க்க முடியாமல் திக்கு முக் காடி வருகின்றனர். அதனால் எதிர்க்  கட்சிகளை வசைபாடியே பிரதமர் மோடி பிரச்சாரத்தை நகர்த்தி வரு கிறார். இச்சூழலில் சர்ச்சைக்குரிய “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் மூலம் கேரள மாநிலத்தில் தேர்த லுக்கு முன் மதவன்முறையை கிளப்  பும் நோக்கத்தில் பாஜக இறங்கி யுள்ளது.

பெண்களை காதல் மூலம் மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்கள் பயங்கரவாத கும்பலிடம் திட்டமிட்டு சேர்க்கப்படுகிறார்கள் என்ற கதை அமைப்புடன் சர்ச்சைக் குரிய வகையில் எடுக்கப்பட்ட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு அரசியல் சார்பின்றி ஒட்டுமொத்த  கேரள மக்களும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். தமிழ்நாட்டு மக்களும்  இந்த திரைப்படம் பார்க்க தேவை யில்லை என்று சமூகவலைத்தளங்க ளில் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 5  அன்று மோடி அரசின் நேரடி கட்டுப்  பாட்டில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி திடீரென “தி கேரளா  ஸ்டோரி” திரைப்படத்தை திரையிட்  டது. இதற்கு கேரள முதல்வர் பின ராயி விஜயன் உள்ளிட்டோர் கடும்  கண்டனம் தெரிவித்தனர். இந்நிலை யில், இடுக்கி மாவட்ட சீரோ மலபார் சபை கிறிஸ்தவ மாணவிகள் மத்தி யில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்  படத்தை ஒளிபரப்பியது. இந்நிகழ்வு  பாஜகவின் திட்டமிட்ட மதவன்முறை  சார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் என  மாநிலம் முழுவதும் அனைத்து தரப்  பினரும் கடும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். 

“மணிப்பூர் ஸ்டோரி”
“தி கேரளா ஸ்டோரி” மூலம் அர சியல் ஆதாயம் தேடும் பாஜகவின் இழிவான அரசியலுக்கு எதிராக  கிறிஸ்தவ பேராயர்கள் பதிலடி வேலைகள் துவங்கியுள்ளனர். அது யாதெனில் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த ஓராண்டாக பற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான மணிப்பூர் வன்முறை  தொடர்பாக “க்ரை ஆஃப் தி அப்ரஸ்டு  (Cry of the Oppressed - ஒடுக்கப்பட்ட வர்களின் அழுகை)” என்ற ஆவ ணப்படத்தை மாநிலம் முழுவதும் ஒளிபரப்ப கிறிஸ்தவ அமைப்புகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. முதற்கட்டமாக எர்ணாகுளம்-அங்க மாலி மறைமாவட்டத்தின் தேவா லயங்களில் “மணிப்பூர் ஸ்டோரி” என அழைக்கப்படும் “க்ரை ஆஃப் தி  அப்ரஸ்டு” ஆவணப்படம் ஒளிபரப் பப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்க ளும்  இந்த  “மணிப்பூர் ஸ்டோரி” ஆவ ணப்படத்தை பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மணிப்பூர் சம்பவத்தை மறக்கக் கூடாது 
“மணிப்பூரில் மக்கள் எதிர்  கொள்ளும் உண்மையான பிரச்ச னைகளைப் பற்றியது தான் இந்த “க்ரை ஆஃப் தி அப்ரஸ்டு” ஆவணப்  படம் ஆகும். மணிப்பூரில் நடந்ததை  நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இதை நாங்கள் (திருச்சபை யினர்) மக்களுக்கு கொண்டு செல்ல  முயற்சிக்கிறோம்” என்று எர்ணா குளம்-அங்கமாலி மறைமாவட்டத் தின் தந்தை ஜேம்ஸ் பனவேலில் கூறி னார்.

சும்மா கிடந்த சங்கை ஊதிய கதை யாக “கேரளா ஸ்டோரி” மூலம் கேர ளாவில் மதம் சார்ந்த பிரிவினையை ஏற்படுத்தி வாக்குகளை பெறலாம் என நினைத்த பாஜகவின் வியூ கத்திற்கு கிறிஸ்தவ பேராயர்கள் பலத்த அடியை கொடுத்து மணிப்பூர்  ஸ்டோரியை நாடு முழுவதும் டிரெண்ட் லிஸ்டில் சேர்த்துள்ளனர்.

;