states

வைக்கத்தில் வரலாறு படைக்கும் சத்தியாகிரக நூற்றாண்டு விழா

வைக்கம், மார்ச் 31 - கேரள மாநில அரசு சார்பில் வைக்கம் சத்தியாகிரகத்தின் 603 நாட்கள் நீடித்து நிற்கும் நூற்றாண்டு விழாக்களுக்காக வைக்கம் நகர் தயாராகி வருகிறது. ஏப்ரல் 1 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில், முதல்வர் பினராயி விஜயனும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இணைந்து மாநில அளவிலான கொண்டாட்டங்களை துவங்கி வைக்கிறார்கள்.  வைக்கம் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.  வாயில்கள் எங்கும் பிரச்சார  சுவரொட்டிகள், பலகைகள் நிறைந்துள்ளன. வைக்கத்தில் உள்ள அனைத்து வரலாற்று மையங்களின் சீரமைப்புப் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழ்நாட்டிற்குச் சொந்தமான ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நினைவிடத்தில், வைக்கம் சத்தியாகிரக நினைவிடம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநாடு நடைபெறும் இடமான வைக்கம் காயலோர கடற்கரை, படகுதளத்தில் மண்  மற்றும் கற்களை நிரப்பி சுத்தம் செய்யப் பட்டது. வைக்கம் சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் வரவேற்புக்குழு அலுவலகம் செயல்படுகிறது.

அமைச்சர்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், எம்.எல்.ஏ. சி.கே. ஆஷா தலைமையில் பணிகள் ஒருங்கி ணைக்கப்படுகின்றன.  சிறப்பு பாதுகாப்பு திட்டம் தயார் செய்தும், 1460 வாகனங்கள் நிறுத்தும் வசதி  செய்து தரப்படும் என்றும் மாவட்ட காவல்துறை தலைவர் கே.கார்த்திக் தெரி வித்தார். சுகாதாரத் துறையின் சிறப்பு மருத்துவக் குழுக்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும். ஏரி உட்பட பாதுகாப்பிற்காக அக்னி ரக்ஷா சேனா 10 ஸ்கூபா குழுக்கள் நிய மிக்கப்படும். பிரதான மேடையின் முன்பு 15,000 பேர் அமரும் வசதி இருக்கும்.  துவக்க விழாவைக் காண நகரின் பல்வேறு இடங்களில் எல்இடி காட்சிப் பலகைகளும் நிறுவப்படும். துப்புரவு பணி, மாநகராட்சி மற்றும் ஹரிதா கர்மா சேனா இணைந்து சிறப்பு செயல் திட்டத்தை தயா ரித்து, சுத்தம் செய்யும் பணியை துவக்கினர். அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவை யும் இருக்கும். மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் குழுவும் இருக்கும். நாட்டின் வரலாற்றை கொண்டாட வைக்கம் நகர மக்களும் தயாராகி வருகின்றனர்.

;