states

img

கேரளம் முழுவதும் பாலிடெக்னிக்குகளில் இந்திய மாணவர் சங்கத்திற்கு மாபெரும் வெற்றி

திருவனந்தபுரம், டிச. 4- கேரளத்தில் நடந்த பாலிடெக்னிக் மாணவர் சங்க தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) அமோக வெற்றி பெற்றது. கேரளத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரித் தேர்தல்களில் கிடைத்த அமோக வெற்றிக்குப் பிறகு பாலிடெக் னிக்கில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் சென்ட்ரல் பாலிடெக்னிக் வட்டியூர் காவ், நெடுமங்காடு, ஆற்றிங்கல் மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கைமனம் ஆகிய இடங்களில், எஸ்.எப்.ஐ., முழு வெற்றி  பெற்றது. நெய்யாற்றின்கரை பாலி டெக்னிக்கில் எஸ்எப்ஐ போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. நெடுமங்காடு பாலிடெக்னிக்கில் கேஎஸ்யு-ஏபிவிபி கூட்டு முயற்சியை தோற்கடித்து எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நான்கு பாலிடெக்னிக்குகளில் நான்கிலும் எஸ்எப்ஐ மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் அமோக வெற்றி பெற்ற தன் தொடர்ச்சியாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இதுபோல் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடைபெற்ற யூனியன் தேர்தலில் எஸ்எப்ஐக்கு வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் நடந்த ஏழு கல்லூரிகளில் ஏழிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது.

வயநாடு மாவட்டத்தில் மூன்று பாலி டெக்னிக் கல்லூரிகளில் நடந்த தேர்த லில், இரண்டு இடங்களில் எஸ்எப்ஐ முழுமையாக வெற்றி பெற்றது. மேனங் காடி மற்றும் மானந்தவாடி பாலிடெக் னிக்கில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. மேப்பாடியில் யுடிஎஸ்எப் என்னும் அரசியல் சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றது. பாலக்காடு மாவட் டத்தில் மூன்று பாலிடெக்னிக் கல்லூரி களில் அமைப்புத் தேர்தல் நடைபெற்ற பொது இடங்கள் அனைத்திலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது.

;