states

img

குஜராத் தேர்தல்: 20.3% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

குஜராத் தேர்தலில் போட்டியிடும் 20.3% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதியில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் கணக்கெடுப்பு குறித்து ஆய்வு செய்து, ஏடிஆர் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, குஜராத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெரும்பாலானோர் பண பலம் படைத்தவர்களாகவும், அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.58 கோடியாகவும், 9 பேரின் சொத்து மதிப்பு ரூ.100 கோடியாக உள்ளது. 69 சதவிகிதம் பேரின் அதிகபட்ச கல்வித்தகுதி 12-ஆம் வகுப்பாக உள்ளது. 35 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோராகவும் உள்ளனர்.
அதேபோல், வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் 20.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2017 தேர்தலில் 14 சதவிகிதமாகவும், 2012 தேர்தலில் 20 சதவிகிதமாகவும் இருந்தது. பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 96 பேர் உட்பட மொத்தம் 192 வேட்பாளர்கள் மீது கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
18 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும், ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கும், 5 பேர் மீது கொலை வழக்குகளும், 20 பேர் கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
குறிப்பாக ஷெஹ்ரா தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் ஜெதா பர்வாத் மீது பாலியல் வன்கொடுமை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைத்தல் போன்ற வழக்குகள் உள்ளன.
2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் காரணத்தை குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, ஏன் குற்றப்பிண்ணனி இல்லாதவர்களை வேட்பாளராக தேர்ந்தெடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முறையில் எவ்வித மாற்றத்தையும் செய்லபடுத்தவில்லை என்று ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
 

;