states

img

ஏபிவிபி மாணவர் தலைவர் அராஜகம்: கல்லூரி பெண் முதல்வரை மாணவியின் காலில் விழ வைத்த அவலம்

குஜராத்தில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால், பாலிடெக்னிக் கல்லூரி பெண் முதல்வரை மாணவியின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்திய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள எஸ்.ஏ.எல் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏ.பி.வி.பி தலைவர் ஜெய்ஸ்வால் தலைமையிலான கும்பல் கல்லூரி பெண் முதல்வரை மாணவி ஒருவரின் காலில் விழுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.  இந்தச் சம்பவம் கடந்த வியாழன் அன்று நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கல்லூரி பெண் முதல்வர் மாணவியிடம் கைகூப்பியும் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஏ.பி.வி.பி தலைவரின் முன்னிலையில்  நடந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.