குஜராத்தில் எலுமிச்சை ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடும் கோடை காரணமாக நாடு முழுவதும் சிட்ரஸ் பழங்களில் தேவை அதிகரித்து உள்ளது. அதிலும் பெரும்பாலானோரின் தேர்வாக எலுமிச்சம் பழம் உள்ளது. இதைத்தொடர்ந்து எலுமிச்சம்பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக குஜராத்தின் ராஜ்கோட்டில் காய்கறி சந்தையில் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்ட வந்த எலுமிச்சம்பழம் அதிரடியாக விலை உயர்ந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் எலுமிச்சை விலை உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.