states

img

கர்நாடகா: விநாயகர் சிலை ஊர்வலத்தில் விபத்து – 9 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்திந்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள மொசலே ஹொசஹள்ளியில் நேற்று இரவு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, எதிரே வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலம் சென்றவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது; 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வேன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் எனவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.