உத்தரகண்ட் மாநிலத்தின் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு - பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது. இந்த சுரங்க பாதையில் நவம்பர் 12 அன்று அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்த நிலையில், இருபுறமும் மண் மூடி யதால் சுரங்கப் பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு 41 தொழிலாளர்களும் செவ்வாயன்று இரவு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். உலகளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த சுரங்க மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை, எலி வளை (துரப்பன) தொழிலாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுரங்க நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள், திருச்செங்கோடு ஜியோ நிறுவன கருவிகள் மற்றும் ஊழியர்கள், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்புக் குழுவினர் என பிரம்மாண்ட குழு மீட்புப்பணி யில் ஈடுபட்டது.
அர்னால்ட் டிக்ஸ்
இந்த மீட்புக்குழுவில் முக்கியமானவர் அர்னால்ட் டிக்ஸ். ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுரங்க நிபுணரான அர்னால்ட் டிக்ஸ் கல்லூரி பேராசிரியர், பொறியாளர், புவியிய லாளர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா வைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக உள்ள அர்னால்ட் டிக்ஸ், 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தடி பாதுகாப்பு குறித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவ தால் உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணிக்கு அர்னால்ட் டிக்ஸை இந்திய அரசு அழைத்தது. ஆஸ்திரேலிய பிரதமரின் ஒப்புதலின் பேரில் நவம்பர் 20 அன்று உத்தர கண்ட் வருகை தந்த அர்னால்ட் டிக்ஸ் 8 நாட்களாக இரவு, பகல் பாராமல் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் திட்டம் வகுத்து கொடுத்து 41 தொழிலாளர்கள் மீட்க உதவினார்.
பதற்றத்தை தணித்த அர்னால்ட் டிக்ஸ்
நவம்பர் 12 முதல் 19 வரை கிட்டத்தட்ட ஒருவாரமாக உத்தரகண்ட் சுரங்க விபத்து மீட்புப்பணியில் பல்வேறு தடங்கலுடன் எவ்வித முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. நவம்பர் 20 அன்று சம்பவ இடத்திற்கு வந்த அர்னால்ட் டிக்ஸ் தனது ஆய்வுக்குப் பின்னர் தந்த ஆலோசனையே பதற்றத்தை தணித்தது. அர்னால்ட் டிக்ஸ் தான் கூறிய ஆலோச னைகளை செவ்வாயன்று நினைவு கூர்ந்தார். அதில், “இது விரைவாக நடக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்க வில்லை, இது எளிதாக இருக்கும் என்று நான் ஒருபோதும் உறுதியளிக்கவில்லை, அது நாளை நடக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இன்றிரவு என்று கூறவில்லை. அவர்கள் கிறிஸ்துமஸ்க்கு வீட்டில் இருப்பார்கள், பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் சொன்னேன்” எனக் கூறி மீட்புக்குழுவினரிடம் கூறினேன் என்று கூறினார். அர்னால்ட் டிக்ஸ் சொன்னதைபோலவே 41 தொழிலாளர்களும் எந்தவித ஆபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.