states

img

'இந்தியா’வை 'பாரத்’ என மாற்றிய அசாம் முதல்வர்!

அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது டிவிட்டர் பயோவில் 'Chief Minister of Assam, India’ என்பதை 'Chief Minister of Assam, BHARAT’ என்று மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றன. இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி ( I.N.D.I.A ) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
இதை அடுத்து, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது டிவிட்டர் பயோவில் 'Chief Minister of Assam, India’ என்பதை 'Chief Minister of Assam, BHARAT’ என்று மாற்றியுள்ளார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்திய என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்று விமர்சித்திருந்தார்.
 

;