புதுதில்லி:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 33 மாநிலங்கள் இணைந்திருப்பதாக மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி தெரிவித்தார்.மக்களவையில் வெள்ளியன்று கேள்வி நேரத்தின்போதுஎழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில்33 மாநிலங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. காங்கிரஸ்கட்சி ஆட்சியில் இருக்கும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களும்இணைந்துள்ளன. ஒடிசா, தெலுங்கானா மற்றும் தில்லி ஆகியமாநிலங்கள் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேற்கு வங்க மாநிலம் இந்த திட்டத்தில்இருந்து கடந்த ஜனவரி மாதம் விலகி விட்டது என்றார்.