கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 அன்று முதுநிலை இரண்டாம் ஆண்டு பயிற்சி மாணவி பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த வன்கொலை வழக்கில் காவல்துறை நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவரும், ஆர்.ஜி.கர் மருத்துவ மனையின் பணியாளருமான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலர் சிபிஐ விசாரணை கட்டுப்பாட்டில் உள்ளனர். மருத்துவ மாணவி வன்கொலை வழக்கில் நீதி கோரி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் உச்சநீதி மன்ற எச்சரிக்கையும் மீறி, கடந்த 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்பு களும் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டங் களால் கலக்கமடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் மருத்துவ மாணவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வரு மாறு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் வியாழனன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. ஆனால் மருத்துவ மாணவர்கள் தரப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், அதை அரசு ஏற்க மறுத்ததாகவும், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததாகவும் கூறி மருத்துவ மாணவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்திலேயே 2 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் பயிற்சி மருத்துவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் பேச்சு வார்த்தை எதுவும் நடக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து செய்தி யாளர்கள் முன்னிலையில் மம்தா பானர்ஜி கூறு கையில், “பதவியைப் பற்றி எனக்குக் கவலை யில்லை. சாமானிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயார். மருத்துவ மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை நான் முயற்சித்து வருகிறேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பயிற்சி மருத்துவர்கள் ஏற்காதபோதும், தலை மைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்காக இரண்டு மணி நேரமாக இங்கேயே காத்திருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. மருத்து வர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்க ளிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார். தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கை யும் எடுக்கப் போவதில்லை. கொலை செய்யப்ப ட்ட பெண் மருத்துவருக்கும், எனக்கும் நீதி வேண்டும்” எனக் கூறினார்.
மேற்குவங்க ஆளுநரும் போட்டி அறிக்கை
இதனை தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் வெள்ளியன்று, “மம்தா பங்கேற்கும் நிகழ்வுகளில் நான் பங்கேற்க மாட்டேன்” எனக் கூறி போட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “அமைதி என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் மாநிலத்தில் வன்முறை, வீட்டில் வன்முறை, அரசு வளாகத்தில் வன்முறை, மருத்துவமனை யில் வன்முறை என மேற்குவங்க மக்களின் பெரும்பான்மையினரிடம் அமைதி இல்லை. இந்த சூழலில் ஆளுநரின் நடவடிக்கை என்ன என மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவரு கின்றனர். எப்போதும் நான் அரசியலமைப்புக் கும், மேற்குவங்க மக்களுக்கும், பாதிக்கப் பட்ட பயிற்சி மருத்துவரின் குடும்பத்தாருக்கும், போராடுபவர்களுக்கும் உறுதுணையாக இருப் பேன். மக்களின் உணர்வுகளை புரிந்துகொள் ளாத மேற்குவங்க அரசு, கடமை தவறிவிட்டது. குற்றங்களைத் தடுக்க வேண்டிய கொல்கத்தா காவல்துறை ஆணையர் மீதும் கடுமையான குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுவது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அதனால்தான் ராஜ்பவனில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது காவல்துறை ஆணையர் அழைக்கப்பட வில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர் பாரதிய நியாய சன்ஹிதாவின் 329ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார். கடமை தவறிய மேற்குவங்க முதல்வரை சமூக நீக்கம் செய்வ தாக முடிவு செய்திருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள், அவரின் மௌனமே இந்த வன்முறை. எனவே, முதல்வரை இனி சமூக ரீதியாக புறக்கணிப்பேன். முதலமைச்சருடன் நான் எந்த பொது மேடையையும் பகிர்ந்து கொள்ள மாட்டேன். முதல்வர் பங்கேற்கும் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன்” என மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அறிவித்திருக்கிறார்.
பரிதவிக்கும் மேற்குவங்க மக்கள்
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 34 நாட்களாக அமைதியின்மை நிலவுகிறது. மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் மேற்கு வங்க மக்கள் பதற்றத்தில் உள்ளனர். ஆனால் மருத்துவ மாணவி வன்கொலை விவ காரத்தை மூடி மறைத்து ஆட்சியை காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மருத்துவ மாணவி வன்கொலை விவகாரம் மூலம் மேற்கு வங்கத்தில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் வகுப்புவாத போராட்டங்கள் மற்றும் ஆளுநர் மூலமாக அரசியல் நடவடிக்கை களை பாஜகவும் அரங்கேற்றி வருகின்றன. இதன்மூலம் இரண்டு கட்சிகளுக்கும் மருத்துவ மாணவி வன்கொலை விவகாரம் பற்றி கவலையில்லை. ஆட்சி அதிகாரம் பற்றியே உண்மையான கவலை உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.