கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் சாலையில் கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடடம் அமைந்துள்ளது. 13 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் திங்கள்கிழமையன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். இவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டரில், “கொல்கத்தா ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ரயில்வே ஊழியர்கள், பொதுமேலாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். மாநில அரசுடன் மீட்பு, நிவாரணப் பணியில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில்உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
ரயில்வே அதிகாரிகள் வரவில்லை: மம்தாவிபத்துப் பகுதிக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். குடும்பத்தில் ஒரு
வருக்கு அரசு வேலை வழங்கப் படும் என்றார். விபத்துப் பகுதியை ஆய்வுசெய்ய ரயில்வே அதிகாரிகள் யாரும்வரவில்லை என்று புகார் கூறிய மம்தா,இதனை அரசியலாக்க விரும்ப வில்லை என கூறிச் சென்றார். கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மனோஜ் ஜோஷி கூறுகையில், “தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள் வந்துவிட்டனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருந்தனர். தீ விபத்தின் காரணமாக டிக்கெட் முன்பதிவுக்கான இயந்திரம் ஒன்று முழுமையாக சேத மடைந்தது. சிஆர்ஐஎஸ் மூலம் பேக் டேட்டாக்களை மீட்க முயற்சி நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.தீ விபத்து சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், உயிரிழந் தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசியபேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.