மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கங்காரம்சக் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனா்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கங்காராம்சக் மற்றும் கங்காராம்சக்-பாதுலியா நிலக்கரி சுரங்கத்தில் இன்று காலை 10 மணி அளவில் வெடிப் பொருட்கள் ஏற்றி சென்ற லாரி தீடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனா்.
பலர் காயமடைந்துள்ளதாகவும், சுரங்கத்திற்குள் சிலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் சுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.