நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்ற பரூக்காபாத், மீரட், சாந்தினி சௌக் உள்ளிட்ட 3 தொகுதிகளில் அந்த கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் சமூகங்களின் (முஸ்லிம்) வாக்காளர்கள் பெருமளவில் இலக்கு வைக்கப்பட்டு நீக்கப்பட்டனர். இது கண்டனத்துக்குரியது.
நாடாளுமன்றத்தில் நுழையும் போது எங்களை தடுத்து நிறுத்திய பாஜக எம்.பி.,க்களுக்கு எதிராக “ஜெய் பீம்” என்ற முழக்கத்துடன் நாங்கள் சவால் விட்டோம். ஆனால் அம்பேத்கரை மதிக்கிறோம் என்று கூறும் பாஜகவினர் திரும்ப எங்களை நோக்கி ஏன் “ஜெய் பீம்” கோஷம் எழுப்பவில்லை. பாஜகவின் அரசியல் அவ்வளவு தான்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடையலாம். ஆனால் சிக்கல்கள் ஒரு போதும் நிறைவடையாது. அம்பேத்கருக்கு இழைக்கப்பட்டுள்ள அவமதிப்பு கடும் கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் வலுவிழக்க செய்வதே பாஜகவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.
மணிப்பூர் கலவரம் குறித்து மோடி பேச மறுக்கிறார். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க மறுக்கிறது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினர் இடையேயான மோதல் குறித்தும் பேச மறுக்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 19 அன்று ஒரே நாளில் 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனடியாக மலையிறங்க திரு விதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலத்தில் 28 நாளில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான சவுதாலா (89) குர்கானில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லோஹேகானில் இருந்து பிர்வா டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, ராய்காட் மாவட்டத்தின் தம்ஹினி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத் தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
“ராகுல் காந்தியை தள்ளிவிட்டது தொடர் பாக காங்கிரஸ் அளித்த புகாரில் எந்த நட வடிக்கையும் இல்லை. உண்மையில் பாஜக வினர்தான் ராகுல் காந்தியை நாடாளுமன்றம் உள்ளே செல்ல விடாமல் தடுத்து தள்ளிவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் அவைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளோம்; ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை” என திமுக நாடாளுமன்ற தலைவர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
“அமித் ஷாவின் உரையில் 12 விநாடிகள் பொய் தகவல்களை சேர்த்து பரப்பிய தற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது” என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள் ளார்.