காற்றழுத்த தாழ்வு மண்டலம்; மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, டிச. 20 - தெற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை (டிச.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. “வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தற்போது வடக்குத் திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கட லில் நிலவுகிறது. இந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகரும். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று வானி லை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6-இல் துவங்குகிறது!
சபாநாயகர் மு. அப்பாவு அறிவிப்பு சென்னை, டிச. 20 - தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக பேர வைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித் துள்ளார். பேரவைத் தலைவர் அப்பாவு, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, “2025-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 6-ஆம் தேதி நடை பெற உள்ளது” என்று தெரிவித்தார். “கூட்டத்தொடர் எத்தனை நாள் நடை பெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும்” என்று கூறிய அப்பாவு, “ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ரவி உரையுடனேயே கூட்டத் தொடர் துவங்கும்” என்றும், “கடந்த ஆண்டைப் போல் முதல் பக்கத்தையும், கடைசிப் பக்கத்தையும் படிக்காமல், இந்த முறை ஆளுநர் உரையை அவர் முழுமையாக வாசிப்பார்” என நம்பிக்கை தெரிவித்தார். ஆளுநர் கருத்துச் சொல்லமுடியாது மேலும், “ஆளுநருக்கு உரை நிகழ்த்துவதற்கு தான் அனுமதியே தவிர கருத்து சொல்வதற்கு அனுமதி இல்லை என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. ஆளுநருக்கு உரிய மரி யாதை வழங்கப்படும். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட 234 பேரவை உறுப்பின ர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனு மதி வழங்கப்படும்” என்றும் சபாநாய கர் அப்பாவு கூறினார். இதனிடையே, தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம.பி.,யில் கேட்பாரற்று கிடந்த 52 கிலோ தங்கம், ரூ.10 கோடி பணம்
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரதி பாத் அருகே மெண்டோரியில் அனாதை யாக கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. தகவலின் பேரில் காவல்துறை சோதனை நடத்தியது. சோதனையின் பொழுது காரில் 52 கிலோ தங்கமும், ரூ.10 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.42 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் தங்கத்தை காரில் விட்டுச் சென்றது யார் என்பது பற்றி காவல் துறை மற்றும் வருமான வரித்துறை யினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற் கட்ட விசாரணையில் குவாலியரைச் சேர்ந்த சேத்தன்சிங் என்பவருக்கு சொந்தமான காரில் தான் 52 கிலோ தங்க மும், ரூ.10 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது என தகவல் வெளியாகி யுள்ளது.
பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ10 லட்சம் நிதி உதவி
முதலமைச்சரின் அறிவிப்புக்கு டியூஜே வரவேற்பு
சென்னை,டிச.20- பணியின்போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கும் அரசாணையை வெளியிட்டு, பத்திரிகையாளர்கள் சங்கங்கள், அமைப்புகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (T.U.J) உள்ளிட்ட கூட்டு நடவடிக்கைக்குழு நன்றியை தெரிவித்துள்ளது. இதுகுறித்து டியூஜே மாநிலத்தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பணியின்போது உயிரிழக்கும், பத்திரிகையாளர்கள், குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என, கடந்த பல வருடங்களாக டியூஜே உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் சங்கங்கள்,சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, சென்னை பிரஸ் கிளப் போன்ற அமைப்புகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஆணையாக வெளியிட்டுள்ளார். இந்த அரசாணையை, அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்கள் அமைப்புகளின், கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்.
ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? - சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி
மதுரை,டிச.20- ஒன்றிய அரசின் தேர்வு முகமை கள் எப்போதுமே பொங்கல் பண்டிகை களை குறி வைத்து, தேர்வுகளை அறி விப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி யுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேர்வு தேதிகளை மாற்றுமாறு ஒன்றிய அமைச் சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு முகமைகள் அறிவிக்கிற பல தேர்வு கள் பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த மாதம்தான் பொங்கல் திரு நாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த பட்டய கணக்காளர் (CA) தேர்வு தேதி யை போராடி மாற்றினோம். இப்பொழுது மீண்டும் இன்னொரு அறிவிப்பு வந்துள்ளது. தேசிய தேர்வு முகமை அறி வித்துள்ள “யுஜிசி - நெட்” தேர்வு அட்ட வணையில் 30 பாடங்கள் மீதான தேர்வு கள் ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் வருகிறது. ஜனவரி 14 அன்று பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் என தொடர் விடுமுறை இருந்தும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் காலம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டோடு, உழவர் பெரு மக்க ளின் உணர்ச்சிப்பூர்வமான கொண்டா ட்டத்தோடும் தொடர்பு டையதாகும். ஆகவே இந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது மிகப் பெரும் சிரமங்களை தங்களுக்கு தரும் என்று தேர்வர்களும், பெற்றோர் களும் என்னை தொடர்பு கொண்டு தலையீட்டை நாடி உள்ளனர். ஆகவே இந்தத் தேர்வு தேதி களை மாற்றுமாறு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குநர் பிரதீப் சிங் கரோலாவுக்கும் கடிதங்களை எழுதி உள்ளேன்.
கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்துகள்
சென்னை,டிச.20- கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் 20, 21, 22 ஆகிய தினங்களில் சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் பிற இடங்களிலிருந்தும் கூடுத லான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற் கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடு தலாக சிறப்பு பேருந்து களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னி யாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 280 பேருந்து களும் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. திருவண்ணா மலை, நாகை, வேளாங் கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு விடுப்பு: வழிகாட்டு விதி உருவாக்க உத்தரவு
சென்னை,டிச.20- விசாரணை கைதி களுக்கு சிறைத் துறை அதி காரிகளே அவசர கால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு நீதி பதிகள் எஸ்.எம்.சுப்பிரமணி யம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனு விசார ணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங் களுக்குப் பிறகு நீதிபதிகள் கூறுகையில், நீதிமன்ற விடு முறை நாட்களில் விசார ணை கைதியின் தாயோ, தந்தையோ இறந்தால், இறுதி சடங்கில் எப்படி பங் கேற்க முடியும்? எனவே, சிறையில் உள்ள விசாரணை கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழக்கும் பட்சத்தில், சிறைத் துறை அதிகாரிகளே உடனடியாக நிபந்தனைகளு டன் அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் விதி களை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று உத்தர விட்ட நீதிபதிகள், மனுதாரர் அவரது தாயின் இறுதி சடங்கில் பங்கேற்கும் வகையில் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர்.
நிலம் விற்ற தீட்சிதர்கள்; விசாரணை நடத்தலாம் உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை,டிச.20- சிதம்பரம் நடராஜர் கோயில் நிலங்களை தீட்சிதர்கள் விற்றது தொடர்பான விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோயிலின் வருவாய் கணக்குகளை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கோயிலுக்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலங்களை பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத் துறை குற்றம்சாட்டியது. ஆனால் 20 ஏக்கர் விற்பனை குறித்த ஆவணங்களை மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக பொது தீட்சிதர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அறநிலையத்துறை வழக்கறிஞர் அருண் நடராஜன், ஸ்வாதின உரிமை பெற்றவரின் உயிலின் அடிப்படை யில் நிலம் விற்கப்பட்டதாகவும், நிலத்தின் பட்டா இன்னும் கோயிலின் பெயரிலேயே இருப்பதாகவும் விளக்கினார். மேலும் சட்டவிரோத நில விற்பனை தொடர்பான கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்யவிரும்புவதாகவும்தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கூடுதல் ஆதாரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியதோடு, பத்திரப் பதிவுத்துறையிடம் விசாரணை நடத்தவும் அனுமதி அளித்தது. மேலும் கோயிலின் வரவு-செலவு கணக்கு விவரங்களை இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு பொது தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. கோயிலின் 101 கட்டளைகளின் தற்போதைய நிலை, கட்டளை தீட்சிதர்களின் விவரங்கள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஎம் இராமநாதபுரம் மாவட்ட 24 ஆவது மாநாட்டு பேரணி
இராமநாதபுரம், டிச.20- இராமநாதபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு பரமக்குடியில் டிச.20, 21, 22 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சந்தைப்பேட்டையில் இருந்து செம்படை தோழர்களின் பேரணியும், காந்தி சிலை முன்பாக பொதுக்கூட்டமும் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி வட்டாரச் செயலாளர் ஐ.கே.தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், க.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மயில்வாகணன், என்.கலையரசன், ஆர்.குருவேல், எம்.சிவாஜி, எம்.முத்துராமு, எம்.ராஜ்குமார், கே.கருணாகரன், இ.கண்ணகி, வரவேற்புக்குழு தலைவர் டி.கே.பலராமன், செயலாளர் தி.இராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பரமக்குடி நகரச் செயலாளர் ஆர்.முனியசாமி நன்றி கூறினார்.