states

img

உத்தரகண்டில் நவீன கொரோனா சிகிச்சை மையம்..  டிஆர்டிஓ அமைத்தது...   

ஹல்த்வானி
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் 500  படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு  சிகிச்சை மையத்தை புதனன்று நடைமுறைக்கு கொண்டு வந்தது. அம்மாநில முதல்வர் முதல்வர் தீரத் சிங் ராவத் திறந்து வைத்தார்.  

வானிலை சீதோஷ்ண  நிலைக்கு ஏற்றார் போல அமைக்கப்பட்ட இந்த சிகிச்சை மையத்தில் 375 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 125 தீவிர சிகிச்சை பிரிவு [ஐசியு] படுக்கைகள் வென்டிலேட்டர்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நோயியல் ஆய்வகம், மருந்தகம், எக்ஸ்-ரே மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் [ஈ.சி.ஜி] என அனைத்து வகையான நவீன ஆய்வகங்களும் இந்த சிகிசிச்சை மையத்தில்அமைக்கப்பட்டுள்ளது என டிஆர்டிஓ தகவல் அறிக்கை அளித்துள்ளது.