சென்னை:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ அந்த மாநில அரசாங்கங்கள் உடன் கைகோர்த்துள்ளது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம்.
இந்த நிறுவனம் இப்போது தமிழகம் முழுவதும் 2,500 க்கக அதிகமாக இலவச கொரோனா படுக்கைகளை அமைத்து வருகிறது. ஏற்கனவே இதில் 660 படுக் கைகள் பயன்பாட்டுக்கு வந்துள் ளன.
முக்கியமாக சென்னை மற் றும் மதுரை மற்றும் பிற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளன. இதில் ஒரு பகுதியாக, மதுரையில் வெறும் 72 மணி நேரத்தில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மையங்களில் அரசு சிகிச்சை அளித்து வருகிறது.ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை களுக்கு ஆக்ஸிஜன் டேங்கர்கள், படுக்கைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகிறது எம்இஐஎல்.மேகா இன்ஜினியரிங் உடன், தமிழகத்தை சேர்ந்த கிரெடாய் மற்றும் ஜி ரியல்டர்ஸ் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக பார்வையிட்டார்.
சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகள்
சென்னை மாநகரம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 1070 ஆக்ஸிஜன் படுக்கைகளை மிக வேகமாக அமைத்து வருகிறது. அத்துடன் ஈரோடு மாவட்டத் தில் 200 ஆக்சிஜன் படுக்கைகள், வேலூரில் 250, அம்பூரில் 100, நட்டாரம் வள்ளி 100, மேலீஸ்வரம் 100, அயப்பாக்கத்தில் 200,சோளிங்கர் 50, வாணியம்பாடியில் 100 மற்றும் வாலாஜாவில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே 660 படுக்கைகளை தயாரித்துள்ள எம்.ஐ.இ.எல் வரும் நாட்களில் 2500 படுக் கைகளை அமைக்க உள்ளது.