மதுரை, நவ.6 - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்கத்தின் தென் மண்டல நிர்வாகி கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மதுரை சொக்கிகுளம் ஜே.சி. ரெசிடென்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் மலைச்சாமி நடராஜன் முன்னிலை வகித்தார். தேசிய திறந்தவெளிப் பள்ளி (என்.ஐ.ஓ.எஸ்.) முன்னாள் இயக்குநர் ரவி, கேந்திரிய வித்யா லயா முன்னாள் இயக்குநர் சுப்பையன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், “ தனியார் பள்ளிகளுக்கு என தனி இயக்குனரகம் ஏற்படுத்தி தந்த மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தும், விண்ணப் பித்த அனைத்து பள்ளிகளுக்கும் உடனடி யாக அங்கீகாரம் வழங்க வேண்டும். அந்தந்த வருடங்களுக்கான இலவச கல்வி கட்டணத் தொகையை அந்த வருடத்திற் குள்ளேயே வழங்க வேண்டும். பள்ளி வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் (எப்.சி) கேட்டு விண்ணப்பம் செய்யும் பொழுது, தேவையற்ற நிபந்தனைகளை விதித்து காலதாமதம் செய்யாமல், முன்பு போல உட னடியாக வழங்க வேண்டும். டி.டி.சி.பி. பிரச்சனைக்கு, பிளானிங் ஏரியாவிற்கு உடனடியாக தீர்வு காண வேண் டும். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில துணைத்தலை வர் ராமசாமி, மாநில துணைச் செயலா ளர் அறிவானந்தம், பொருளாளர் சிங்கப்பாண் டியன், விருதுநகர் சீனிவாசன், சி.எஸ்.எம்.ஏ சங்க நிர்வாகிகள் மதுரை சகோதயா சேர்மன் பரம கல்யாணி, கவிதா சுப்ரமணியன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஸ்மார்ட் டைல் நிறுவனத் தின் முதன்மை செயல் அலுவலர் சுவாமி நாதன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், விடைத்தாள் திருத்துவதற்கான மென்பொ ருளை அறிமுகம் செய்து வைத்துப் பேசி னார்.