சென்னை:
கரூர் வளதாம்பாளையம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து கரூர் வளதாம்பாளையம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 200 படுக்கைகளில் 156 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. இந்த கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கரூர் எம்.பி. ஜோதிமணி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.