உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசம் – கடந்த மாதம் 23 ஆம் தேதி கான்பூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அண்டை வீட்டார் பலருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் ஜிகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பகலில் கடிக்கக்கூடிய எய்ட்ஸ் வகை கொசுக்களால் ஜிகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.