உ.த்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னூஜில், பாலியல் புகார் அளிக்க வந்த தாயை, காவல் துணை ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னூஜில், 17-வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது குறித்து அவரது தாய் கன்னூஜ் காவல் நிலையத்தின் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், பாலியல் வழக்கை விசாரித்து வந்த காவல் துணை ஆய்வாளர் அனுப் குமார் மௌரியா, கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 28) அன்று, எஃப்.ஐ.ஆர்-ல் கையெழுத்திட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அடுத்து, அந்த பெண் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்த நிலையில், அனுப் குமார் மௌரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.