லக்னோ:
சாமி கும்பிட வந்த பெண்ணை, கோயில் அர்ச்சகரும், அவரது உதவியாளர் 2 பேருமாக மொத்தம் 3 பேர், கோயிலுக்குள்ளேயே கும்பலாக வல்லுறவுக்கு உள்ளாக்கி, மிகக்கொடூரமாக படுகொலையும் செய்த சம்பவம்பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உ.பி. மாநிலம் படான் மாவட்டத்தின் உகாய்தி காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்டகிராமத்தில் 50 வயது பெண் ஒருவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்தஜனவரி 3 அன்று மாலை 5 மணியளவில் கோயிலுக்குச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.இந்நிலையில், இரவு 11.30 மணியளவில்அந்தப் பெண்ணை கோயில் அர்ச்சகர் மகாந்த்பாபா சத்யநாராயண், அவரது உதவியாளர் வேத்ரம் மற்றும் ஓட்டுநர் ஜஸ்பால் ஆகிய மூவரும் குற்றுயிரும் குறையுயிருமாக தூக்கிவந்து-பெண்ணின் வீட்டுமுன்பு போட்டுவிட்டு ஓட முயன்றுள்ளனர். அருகில் இருந்தவர்கள் அவர் களைப் பிடித்துக் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட பெண் கோயில் அருகிலுள்ள கிணற்றில் விழுந்து விட்டதாகவும், நாங்கள் மீட்டு தூக்கி வந்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற நிலையில், அங்கு, அர்ச்சகர்உள்ளிட்டவர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்துள்ளார். எனினும் அன்று இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஅந்தப் பெண் இறந்து போயுள்ளார்.ஆத்திரமடைந்த கிராம மக்கள், உகாய்தி காவல்நிலையத்திற்குச் சென்று அர்ச்சகர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல் நிலைய அதிகாரி ரவேந்திர பிரதாப் சிங் புகாரை வாங்க மறுத்துள்ளார். பல மணிநேரமாகியும் சம்பவ இடத்திற்கு வராமல் அலட்சியம் காட்டியுள்ளார். சுமார் 18 மணிநேர தாமதத்திற்கு பிறகு செவ்வாய்க்கிழமைதான் உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதில், அர்ச்சகரும், அவரது உதவியாளர் களும், வல்லுறவுக் குற்றத்தை மறைக்க, பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்து கடுமையாக தாக்கி இருப்பதும், அந்த இடத்தையே சிதைத்திருப்பதும், அதுமட்டுமன்றி அவர் ஓடிவிடாதபடி கால்களையும்,விலா எலும்புகளையும் உடைத்ததுடன், நுரையீரலை குத்தி கிழித்திருப்பதும் மருத்துவர் களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தில்லி நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்தைவிட மோசமான சம்பவம் என்பதும் வெளிச்சத்
திற்கு வந்துள்ளது.இது உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது, அர்ச்சகரின் உதவியாளர்களான வேத்ரம், ஜஸ்பால் ஆகியோரை மட்டும் கைதுசெய்துள்ள ஆதித்ய நாத் அரசு மகந்த் பாபா சத்யநாராயணை இதுவரை கைது செய்யவில்லை.