உத்தரப்பிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு மாணவரை அடித்து தாக்கப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு பள்ளியில் 7 பேர் கொண்ட மாணவர்கள் கும்பல், 10 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவரை தாக்கி, கால்களை நக்கவைத்து அதை வீடியோவாக பதிவு செய்யப்பட்டு நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பெருமளவில் வைரலான நிலையில், தலித் மாணவரை அடித்து கொடுமைப்படுத்திய இந்த சம்பவத்தில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளி மைனர் என்பதால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் அபிஷேக், விகாஸ் பாசி, மகேந்திர குமார், ஹிருத்திக் சிங், அமன் சிங் மற்றும் யாஷ் பிரதாப் என 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.