வேதாரண்யம், மே 8 கள்ளக்குறிச்சியில் நகைக்கடை வைத்தி ருக்கும் முருகன் என்பவருக்கும், சின்ன சேலத்தைச் சேர்ந்த நகை செய்பவரான தியாகு என்பவருக்கும் வியாபார ரீதியாக பழக்கம் இருந்து வந்துள்ளது. தற்சமயம் அட்சய திரிதியை வந்ததால் குறைந்த விலைக்கு அதாவது கிராமிற்கு ரூ. 400 குறைத்து தங்கம் வாங்கி தருவதாக தியாகு கூறினார். இதை நம்பி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகன், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் பகுதியைச் சேர்ந்த பண்டேரிநா தன் (65) என்பவரிடம் தொடர்பு கொண்டு பேசி னார். அதற்கு பண்டேரிநாதன் உங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்று கேட்டதாக வும், அதற்கு முருகன் 2 கிலோ வேண்டும் என்று சொன்னதாகவும் தெரிகிறது. 2 கிலோ தங்கத் திற்கு ரூ.96 லட்சம் எடுத்துக்கொண்டு உடனே வாருங்கள். இல்லையென்றால் வேறு நபருக்கு கொடுத்து விடுவேன் என கூறி யுள்ளார். இதை கேட்ட முருகன், நான் பணத் துடன் வருகிறேன் என கூறி கருப்பம்புலத் திற்கு ரூ.96 லட்சத்துடன் வந்துள்ளார். அப்போது பண்டேரிநாதன் ரூ.96 லட்சம் பணத்தை பெற்று கொண்டு 850 கிராம் எடை கொண்ட ரூ.46 லட்சம் மதிப்புடைய தங்கத்தை கொடுத்து விட்டு பாக்கியை நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என அனுப்பி விட்டார்.
இதை பெற்றுக்கொண்ட முருகன், தான் அழைத்து வந்த நபரிடம் 850 கிராம் நகையை கொடுத்து அனுப்பி விட்டு, தனியே சென்ற போது பண்டேரிநாதன் ஆட்களை அனுப்பி முருகனை மிரட்டி அடித்து, அவர் அணிந் திருந்த தங்க சங்கிலி, மோதிரம் ஆகிய வற்றை பறித்து கொண்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட முருகன் வேதாரண்யம் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார், மோசடியில் தொடர் புடைய கருப்பம்புலத்தைச் சேர்ந்த பண்டேரிநாதன், கார் ஓட்டுநரான திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ், சென்னையைச் சேர்ந்த பாலகுமார், திருத்துறைப்பூண்டி சேர்ந்த துர்காதேவி, கருப்பம்புலம் செல்லத்துரை, வடமழைமணக்காடு தனுஷ்கொடி, திருத்து றைப்பூண்டி மணிமாறன் ஆகிய 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண் டுள்ளனர். இவர்களிடம் இருந்து இரண்டு கார், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.