லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் மாயா ஷங்கர் பதக். வயது 70.செளபேபூரின் பலுவா பஹாடியா மார்க் பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வராக இருக்கும் பதக், வாரணாசி தொகுதி பாஜக முன்னாள் எம்எல்ஏ-வும் ஆவார். மொத்தம்2 முறை எம்எல்ஏவாக இருந் துள்ளார்.இந்நிலையில், ஷங்கர் பதக்,தனது கல்லூரியில் பயிலும், பேத்தி வயதுள்ள மாணவி ஒருவரிடம் தொடர்ச்சியாக ஆபாசமாகப் பேசி, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் வழக்கம்போல ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, இனியும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்குப் போன மாணவி, தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
நடந்ததைக் கேட்டு, அதிர்ச்சிஅடைந்த குடும்பத்தினர், கல்லூரிக்கே வந்து, பாஜக முன்னாள்எம்எல்ஏ ஷங்கரைக் கண்டித்துள்ளனர். கல்லூரி முதல்வராகஇருப்பவரே இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கேட்டுள்ளனர்.அப்போது, குடியரசு தின விழா பேச்சுப்போட்டிக்கு ஒத் திகை நடந்து வருகிறது. அந்தஒத்திகையில், உங்கள் மகள் சரியாக பேசவில்லை. அதனால் அவரைத் திட்டினேன். அதற்காகவே உங்கள் மகள் என்மீது வீண்பழி போடுகிறார்; பொய் சொல்கிறார் என்று ஷங்கர் பதக்பிரச்சனையைத் திசைத்திருப்பியுள்ளார்.இதனால், மேலும் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர், பாஜக முன்னாள் எம்எல்ஏஷங்கர் பதக்கை, அடிக்கப் பாய்ந்தனர். இதில் அரண்டுபோன பதக், கடைசியில் மாணவியின் குடும்பத்தினரைக் கையெடுத்து கும்பிட்டும், தன்னுடைய காதைப் பிடித்து தோப்புக்கரணம் போட்டும்- சங் பரிவாரங்களுக்கே உரிய வகையில் மண்டியிட்டு ‘மன்னிப்பு’ கேட்டுதப்பித்துள்ளார்.