states

img

42 வயது பெண் கோயிலுக்குள் பாலியல் வன்கொலை .... கூட்டாளி வீட்டில் பதுங்கியிருந்த உ.பி. கோயில் அர்ச்சகர் கைது...

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் இருப்பது பதான் மாவட்டம். இங்குள்ள மேவ்லி கிராமத்தில், கடந்த ஞாயிறன்று சிவன் கோயிலுக்கு சாமிகும்பிடச் சென்ற 42 வயதுப் பெண்ணை, கோயில் அர்ச்சகர் உள்ளிட்ட 3 பேர், மிகக் கொடூர மான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்தனர்.

பெண்ணின் பிறப்புறுப்பை சிதைத்ததுடன், கால், விலா எலும்புகளை நொறுக்கியும், குடலை கம்பியால் குத்திக் கிழித்தும் நடந்த இந்த படுகொலை, உ.பி. மட்டுமன்றி, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தில் தாமதமாகவே நடவடிக்கையில் இறங்கிய உ.பி. பாஜக அரசின் காவல்துறை கோயில் அர்ச்சகர் மகந்த் பாபா சத்யநாராயணனை விட்டுவிட்டு, அவரது உதவியாளர்களான வேத்ராம், ஜஸ்பால் ஆகியோரை மட்டும் கைது செய்தது. அர்ச்சகர் சத்ய நாராயணன் தலைமறைவாகிவிட்ட தாகவும், அவரைப் பற்றி தகவல்கொடுப்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.இந்நிலையில், சம்பவம் நடந்த மேவ்லி கிராமத்திற்கு உள்ளேயே தனது ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அர்ச்சகர் சத்யநாராயணன்(45) வியாழனன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதுஇந்தியத் தண்டனைச் சட்டம்(IPC) 376 (d) மற்றும் 302 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் சத்யநாராயணனின் ஆசிரம அறையிலும், கட்டிலிலும் ரத்தக்கறைகளை கண்டறிந்துள்ள போலீசார், வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணின் ரத்தக்கறை படிந்த சேலையையும் கோயிலுக்கு அருகில் கைப்பற்றியுள்ளனர்.முக்கியக் குற்றவாளியான அர்ச்சகர் சத்ய நாராயணன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்புதான் மேவ்லி கிராமத்திற்கு வந்துள்ளார் என்றும், இங்கிருந்த பாழடைந்த சிவன் கோயிலை புனரமைத்த அவர், அருகிலேயே ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கிக் கொண்டு, கோயிலின் அர்ச்சகராகவும் பணியாற்றி வந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.