states

img

மகனின் கண் முன்னாலேயே துடிதுடித்து இறந்த தாய்.... கொரோனா சான்றிதழ் இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு....

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் இளைஞர் பிரதீப். இவரது தாயார் ஜெயம்மா. 50 வயதாகும் இவருக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக உடல் நலிவு ஏற் பட்டுள்ளது. 

இதனால் ஜெயம்மாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு ஹைதராபாத்திலுள்ள ஒவ் வொரு மருத்துவமனையாக பிரதீப் ஏறி இறங்கியுள்ளார். ஆனால், கொரோனா சான்றிதழ்இல்லை என்ற காரணத்தைக் கூறி, அனைத்து மருத்துவமனைகளுமே ஜெயம்மாவை சிகிச்சைக்குசேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆதார்அட்டை நகலில், கொரோனாபாசிட்டிவ் என்று எழுதப்பட்டிருந்ததை சான்றிதழாக ஏற் றுக்கொள்ள முடியாது என்றும் மறுத்து அனுப்பியுள்ளனர். ஹைதராபாத் காந்தி அரசுமருத்துவமனையும்கூட ஜெயம்மாவை சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயாரில்லை. பிரதீப் எவ்வளவோ போராடிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. இதனிடையே, ஆம்புலன் சில் இருந்தவாறே ஜெயம்மாவின் உயிர் பிரிந்துள்ளது.

தனதுகண்ணெதிரிலேயே தனது தாய்துடிதுடித்து இறந்ததைப் பார்த்து, இளைஞர் பிரதீப் மருத்துவமனை வாசலிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதுள் ளார். பின்னர் ஜகன்குடாவில் உள்ள வீட்டிற்கு தாயின் உடலைகொண்டுசென்ற அவர், அங்கிருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் தாயின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தகனம் செய்துள்ளார்.தனது தாயைக் காப்பாற்றுவதற்கு உதவாத இந்த சமூகத்தின் மீதான கோபத்தையும், தனது ஆற்றாமையையும், ‘ஆர்ஐபி சொசைட்டி’ என்று வாட்ஸ் ஆப்-பில் ஸ்டேட்டஸ் வைத்து வெளிப்படுத்தியுள்ளார்.