tamilnadu

மருத்துவ காப்பீடு இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு

கோவை, செப்.6- கோவை அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீடு இல் லாததால் இதய நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்டம், நல்லாம் பாளையம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரின் தாயார் அங்கம்மாள்(73). குமார் கடந்த சில ஆண்டுக்கு முன் குடும்ப சூழ்நிலை யின் காரணமாக வேலைக்காக தனது தாயுடன் கர்நாடக மாநிலம், மணி பால் சென்றுவிட்டார். அங்கு தங்கி கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கூலிதொழில் செய்து வருகிறார். இவரின் மூத்த சகோதரி உள்ளிட் டவர்கள் கோவை நல்லாம்பாளையம் பகுதியில் தங்கி வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த மாதம் குமாரின் தாய் அங்கம்மாளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவ ரின் உடல்நிலை மிகவும் பாதிக் கப்பட்டது. இதனை தொடர்ந்து குமார், மணிபால் பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவர் கள் பரிசோதனையில் அங்கம்மா ளுக்கு இதயத்தில் அடைப்பு ஏற் பட்டு இருந்தது தெரியவந்தது. சிகிச்சை அளிக்க ரூ.2 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கோவையில் உள்ள குமாரின் சகோதரி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கலாம் என தெரிவித்துள் ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆக.30 ஆம் தேதி குமார் தனது தாயுடன் கோவை வந்தார். பின்னர், உடனடியாக கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கமாளை பரிசோதனை செய்த மருத்துவமனையின் இதய நோய் தலைமை மருத்துவர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு இருந் தால் தான் அட்மிட் செய்ய முடியும் எனவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் இருந்த நிலையிலும், முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் இல்லாததை சுட்டி காட்டி சிகிச்சை அளிக்க மறுப்பு தெரி வித்துள்ளனர். இவ்வாறு நோயா ளியை கடந்த ஒரு வாரமாக அலைக் கழிப்பும் செய்துள்ளதாக கூறப் படுகிறது.  இது குறித்து குமார் கூறுகையில், நான் கடந்த 30 ஆம் தேதி எனது தாயா ருடன் சிகிச்சைக்கு வந்தேன். இதய நோய் தலைமை மருத்துவர் காப்பீடு அட்டை இல்லை என கூறி சிகிச்சை அளிக்க முடியாது என தெரிவித்தார். என்னிடம் பிரதமரின் காப்பீடு இருக் கிறது என கூறினேன். ஆனாலும் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்துள் ளனர். ஒரு வாரமாக வேலைக்கு செல் லாமல் அலைந்து வருகிறேன். எனது தாயாரின் உடல்நிலை மிகவும் மோச மடைந்து வருகிறது. அரசு மருத்துவ மனையில் மருத்துவ காப்பீடு இல்லை என்றால் சிகிச்சை அளிக்க முடியாது எனகூறுவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.