states

img

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 4ஆம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 திரைப்படத்தை, நடிகர் அல்லு அர்ஜுன் பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் திரையரங்கிற்கு சென்றிருந்தனர்.

இதனால், அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி(35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா(9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கிழே விழுந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில், சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது தாயார் ரேவதி உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில், பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பெண் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று(டிச.13) கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, நம்பள்ளி நீதிமன்றம் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.