இந்த மொபைல்களில் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது!
கிட்கேட் ஓஎஸ் உள் ளிட்ட பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் களை கொண்டு இயங் கும் 20 மொபைல் போன் மாடல்களில், வாட்ஸ்அப் வேலை செய் யாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, சாம்சங் மாடல்கள் - Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini. மோடோரோலா மாடல்கள் - Moto G (1st Gen), Razr HD, Moto E 2014 எச்.டி.சி மாடல்கள் - One X, One X+, Desire 500, Desire 601 எஸ்.ஜி மாடல்கள் - Optimus G, Nexus 4, G2 Mini, L90, சோனி மாடல்கள் - Xperia Z, Xperia SP, Xperia T, Xperia V ஆகிய மேலே கொடுக்கப்பட்டு உள்ள மொபைல் போன் மாடல்கள் 2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடி யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓஎஸ்களை பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் மொபைல்களை அப்கிரேட் செய்து கொள்ளும்படி மெட்டா நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
கூகுள் குரோமில் புதிய அம்சம்!
குரோமில் இணையப் பக்கங்களை பகுப்பாய்வு செய்யும் புதிய ஏஐ அம்சத்தை கூகுள் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. தொழில்நுட்ப ஆர்வலர் லியோ பெவா தனது எக்ஸ் பதிவில், கூகுள் குரோமின் கேனரி வெர்ஷனில் “Client Side Detection Brand and Intent for Scam Detection” என்ற புதிய வசதி அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித் துள்ளார். இணையப் பக்கங்களை பயன் படுத்தி மோசடி செய்பவர்கள், உங்கள் தரவுகளை திருடப்படு வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என பகுப்பாய்வு செய்ய, Chrome Canary Flag என்ற அம்சத்தை கூகுள் நிறு வனம் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம், சாத னத்தில் உள்ள large language Model (LLM)-ஐ பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த, குரோ மின் கேனரி வெர்ஷனை பதிவிறக்கம் செய்து Install செய்ய வேண்டும். அதன் பின் “chrome://flags” என address bar-இல் டைப் செய்து, அடுத்த பக்கத் தில் “Client Side Detection Brand and Intent for Scam Detection” என்று டைப் செய்யவும். Drop down Menu- வில் Enable ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
ஐஓஎஸ் பயனர்களுக்கு புதிய வசதியை அறிவித்த வாட்ஸ்அப்!
ஆவணங்களை ஸ்கேன் செய்வ தற்கான புதிய அம்சத்தை ஐஓஎஸ் பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு, மூன்றாம் தரப்பு செயலிகளையே நாம் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இந்த சூழ லில், மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு செல்லாமல், வாட்ஸ்அப்பிலேயே விரைவாக ஆவணங்களை ஸ்கேன் செய்து, மற்றவர்களுக் கும் பகிரும் வகையில் ஐஓஎஸ் பயனர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. முதலில், வாட்ஸ்அப் சாட்டை திறந்து Sharing menu- வுக்கு செல்லவும். அதில் ‘Documents’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். ஸ்கிரீனில் காண்பிக்கும் கேமரா ஆப்ஷனை கிளிக் செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்ய லாம். ஸ்கேன் செய்த பிறகு, ஆவ ணத்தை Crop செய்யலாம், Brigh tness மற்றும் Contrast ஆகிய வற்றை சரிசெய்து பகிர்ந்து கொள்ளலாம். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.