states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மன்மோகன் சிங் ஜேஎன்யு பல்கலைக்கழகத்துக்கு வந்த போது மாணவர் இயக்கங்கள் கருப்பு கொடி காட்டினார்கள். 2 மாணவர்களை நிர்வாகம் கல்லூரியில் இருந்து வெளியேற்றியது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு, போராட்டம் ஜனநாயக உரிமை என சொல்லப்பட்டு, மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்கள். இன்றிருக்கும் அரசியல் சூழலை யோசித்துப் பாருங்கள். மன்மோகன் சிங், சிறந்த பிரதமர் என்பதற்கான சாட்சி.

மன்மோகன் சிங்கிடம் ஊடகவியலாளர்கள் கடுமையான கேள்விகள் கேட்டனர். அரசை எதிர்த்து உண்மையை அவர்கள் பேசினர். ஊடக சந்திப்புகளில் அவரை திணறச் செய்தனர். ஆனால் அவர் சிறுமையோ பழியுணர்ச்சியோ கொண்டு, விமர்சிப்பவர்கள் மீது அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை ஏவவில்லை. இதுவே மோடிக்கும் மன்மோகன் சிங்குக்குமான வேறுபாடு.

ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை சினிமா பிரபலங்கள்தான் இனி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு போதும் சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்ய மாட்டோம்.

ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் முதல்வர் சந்திரபாபு மின் கட்டணங்களை கடுமையாக உயர்த்தி, ஆந்திர மாநில மக்கள் மீது ரூ.15,000 கோடி கூடுதல் சுமையை ஏற்றியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

புத்தாண்டை முன்னிட்டு கோவா கடற்கரை யில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அங்குள்ள ஹோட்டல் அறைகள் 100% நிரம்பி விட்டதாக கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே கூறியுள்ளார்.

பார்முலா கார் பந்தய வழக்கு தொடர் பாக தெலுங்கானா முன்னாள் அமைச்ச ரும், பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.டி.ராமா ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜக ஆளும் அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் (532.46 கிராம் ஹெராயின்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளராகப் பணிபுரியும் 28 வயது பிஎச்டி மாணவி வேலை வாங்கித் தருவது தொடர்  பான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டார்.

சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் கலால்துறை அமைச்சருமான கவாசி லக்மா  மற்றும் அவரது மகனின் வீட்டில் சனிக்கிழமை அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தினர்.

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவம் தலைதூக்கி யுள்ளது. மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச்  சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் உட்பட  2 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணா விரதம் இருந்து வரும் விவசாயிகள் தலை வர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை டிசம்பர் 31ஆம்  தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்  என்று பஞ்சாப் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.