states

img

வக்பு மசோதா : ஜேபிசி கூட்டத்தில் மோதல்

வக்பு மசோதா தொடர்பாக பாஜக எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளு மன்ற கூட்டுக் குழு  (ஜேபிசி) கூட்டம் தில்லியில் செவ்வா யன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக - எதிர்க்கட்சி  எம்.பி.,க்கள் இடை யே கடும் வாக்குவா தம் ஏற்பட்டது.  திரிணாமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்.பி., அபிஜித் கங்கோபாத்யாய் ஆட்சே பம் (நக்கல் நையாண்டியுடன்) தெரி வித்துள்ளார். இதனால் அபிஜித் கங்கோ பாத்யாய் மற்றும் கல்யாண் பானர்ஜி இடையே வாக்குவாதம் முற்றி வார்த்தை மோதல் ஏற்பட்டது. கோபத்தில் கல்யாண் பானர்ஜி அரு கிலிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேஜையில் அடித்த தால் உடைந்த கண்ணாடி டம்ளரின் துண்டு, கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகவும் அதனால் கல்யாண் பானர்ஜிக்கு அருகிலிருந்த எம்.பி.க்கள் முதலுதவி செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.