states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. நவம்பர் 1 முதல் போலிக் குறுஞ்செய்திகள், ஓடிபி- யைத் தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்க ளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக டிராய் (TRAI) அறிவித்து இருந்தது. ஆனால் பல்வேறு நிறுவனங்களின் கோரிக்கையால், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பதை டிசம்பர் 1 க்கு தள்ளி வைத்துள்ளது டிராய் நிறுவனம்.
  2. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை ஒட்டி மும்பையில் நவம்பர் 6 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
  3. “தேசிய தலைநகரின் பொது சுகாதாரப் பிரச்ச னையில் பிரதமர் மோடி அரசியல் செய்கி றார்” என தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரு மான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
  4. கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷ னுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் மருத்துவ காரணங் களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
  5. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அடையா ளம் தெரியாத நபர் ஒருவர் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் பிணைத்தொகையாக ரூ. 2 கோடி கேட்டுள்ளார். மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு அனுப்பப்ப  ட்டுள்ள அந்த மிரட்டல் செய்தியில் நடிகர் பணத்தைச் செலுத்த தவறினால் அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.