நொய்டா மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி, கடத்தல், விற்பனை மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள் போதைப் பொருள் பயன்பாட்டுக் கூடாரமாக உள்ளன. இந்நிலையில், பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான கிரேட்டர் நொய்டாவுக்கு அருகே உள்ள கௌதம புத்தா நகரின் கசானா தொழிற்பேட்டை யில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையின் ஆய்வகத்தில் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெத்தம்பேட்டமைன் என அழைக்கப்படும் வேதிப்பொருளை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 95 கிலோ மதிப்புள்ள மெத்தம்பேட்டமைனின் மதிப்பு ரூ.100 கோடி என செய்திகள் வெளியாகியுள்ளன. மெத்தம்பேட்டமைன் தயாரிப்பு ஆய்வ கத்தை நடத்தி வந்த 4 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவர் தில்லி திகார் சிறை கண்காணிப்பாளர் என தெரிய வந்துள் ளது. மற்றொருவர் தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர். மற்ற இருவரும் மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர் மற்றும் மெக்சிகோ வைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளி யாகியுள்ளன.