நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு
சென்னை, ஜன. 31 - தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வரு கிறார். இந்நிலையில், பொரு ளாதாரத்தில் தமிழ்நாடு சாதித்த விவரங்களை பிரத மருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு வின் அறிக்கை வெளிப் படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய அள வில் 2-ஆவது பெரிய பொரு ளாதார மாநிலமாக தமிழ் நாடு வளர்ச்சி பெற்றுள் ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக் கொண்டால், இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்கு 2023-24-ஆம் ஆண்டில் 8.9 விழுக் காடாக உயர்ந்துள்ளது. மேலும், இந்திய அளவில் தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் 171.1 விழுக்காடு உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.