சென்னை,ஜன.15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி வழங்காமல் மோடி அரசு காலம் கடத்தி வரு வதற்கு அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இணைய வழியில் திங்களன்று (12.01.2025) மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ, மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொருளாளர் அ.பழநிசாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சி யாக வெட்டிச் சுருக்கி வருகிறது. நிதி ஒதுக்கீட்டிற்கேற்ப பயனாளிகளின் எண்ணிக்கையையும் 25 கோடியில் இருந்து சரி பாதியாக நாடுமுழுவதும் ஏறக்குறைய 13 கோடியாகக் குறைத்து விட்டது. விவ சாய நெருக்கடியால் ஏற்பட்டுள்ள கடும் வேலையின்மையால் கிராமப்புற மக்கள் வேலை, வருமானத்தை இழந்து தவிக்கும் நிலை உருவாகி யுள்ளது. ஒன்றிய பாஜக அரசு ஊரக வேலைத் திட்டத்தை செயல்படுத்து வதிலும் பல்வேறு புதிய நிபந்தனை களை மாநிலங்களுக்கு விதித்து திட்டத்தை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுகிறது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஊரக வேலைத் திட்டம் அற்ப சொற்பமாக செயல்படுத்தப்படுகிறது.
நாகை மாலி எம்எல்ஏ வேண்டுகோள்
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வேலை செய்த திட்டப் பய னாளிகளுக்கு மூன்று மாதங்களைக் கடந்தும் ஊதிய பாக்கிகள் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் ஒன்றிய பாஜக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. பொங்கல் பண்டிகை காலத்திலாவது, ஊதியம் வங்கிக் கணக்கில் வரவாகும் என்று காத்திருந்த கிராமப்புற ஏழை மக்களுக்கு ஒன்றிய பாஜக அரசு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.பாஜக அரசின் இந்த நட வடிக்கையை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு தெரியப்படுத்தினார். முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, ஊரக வேலைத்திட்டப் பயனாளி களின் ஊதியப் பாக்கியை, உடனடியாக விடுவிக்க ஊரக வளர்ச்சித் துறைக்கு அறி வுறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். முத லமைச்சரின் இந்த விரைவான தலையீடு வரவேற்கத்தக்கதாகும். எனவே ஒன்றிய அரசு இதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாட்டின் ஊதிய நிலுவை 1056 கோடி ரூபாயை உடனடியாக திட்டத்தின் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைத்திட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்களில் தேவையின் அடிப்படை யில், உருவாக்கப்பட்ட மனித சக்தி நாட் களுக்கு ஏற்ப தமிழ்நாடு அரசால் உரு வாக்கப்பட்டுள்ள வேலைத் தொகுப்புக்கு நிபந்தனையற்ற ஒப்புதலையும் அளித்து முழுமையாக வேலை ஊதியத்தை வழங்கிட வேண்டும். கடந்த மூன்று மாதங்களாக பருவமழை காலத்தில் வேலை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக ஊரக வேலை திட்டத்தில் வேலை, முழுமை யான ஊதியம் வழங்கிட ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜனவரி 30 ஆர்ப்பாட்டம்
ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊராட்சிகளிலும் வேலை தொடங்கி தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும் தினக்குலியை 600 ரூபாயாக உயர்த்திட வேண்டும். ஒன்றிய அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் திட்டத்திற்கு ரூ.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30 அன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், கிராமப்புற மக்களை வலுவாகத் திரட்டி போராட்டம் நடத்திட என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.