states

உணவுக்கான உரிமையும் பொது விநியோக திட்ட சவால்களும்

உணவுக்கான உரிமை பற்  றிய விவாதம் பல மாநிலங்  களில் இன்று முன்னுக்கு வருகிறது.ஜார்க்கண்ட், ஒரிசா,  பீகார் போன்ற மாநிலங்களில் பொது விநியோக முறையின்(PDS)  பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்  கான குடும்பங்கள் நீக்கப்பட்டுள் ளன என்பதை இந்த விவாதங்கள் சுட்டிக் காட்டுகின்றன. முசாஹர் சமூகத்தின் உதாரணம் கோவிட் 19 காலத்தில் ரேஷன் மூலம் விநியோகம் மிகவும் தேவைப்பட்டபோது பீகாரில் அத்தி யாவசியப் பொருட்கள் வழங்கலில்  கடும் நெருக்கடி ஏற்பட்டது. இப்போ தும் கூட ரேஷன் முறையில் வழங் கப்படும் பொருட்களை நம்பி தான்  அவர்கள் வாழ்கின்றனர்.முசாஹர்  போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் படும் அவதி குறிப்பி டத்தக்கது. சாதி,அரசியல் வன்மத் தால் வறுமையின் விளிம்பிற்கு அப்  பால் தள்ளப்பட்டு பொது விநியோ கத் திட்டத்துக்காக இவர்கள் நடத்  தும் போராட்டம் குறிப்பிடத்தக்கது.

ரேஷன் அட்டை இருந்தும் பலன் இல்லை

பாட்னாவில் இவர்களின் பல குடும்பங்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.ரேஷன் அட்டை இருந்தாலும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அதில் இடம்பெற முடிவதில்லை. நியாய  விலைக் கடைகளில் பயோமெட்  ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்ட திலிருந்து மாதாந்திர ரேஷன் பெற  முடியாமல் பலர் அவதிப்படுகின்ற னர்.சம்பந்தப்பட்ட நபர்கள் புதிய  ரேஷன் அட்டையை பெற்றாலும் மீண்டும் அவர்கள் பெயர் நீக்கப்படு கிறது. ஸ்மார்ட் (சிட்டிஸ்) நகரங்கள்  என்ற அரசின் உயர்மட்ட சந்தைப்  படுத்தும் பகட்டு விளம்பரங்கள் அர சுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உயிரோட்டமான தொடர்பை  துண்டித்து விடுவதை நம் கண் முன்னே பார்க்க முடிகிறது. பொது விநியோகத் திட்டத்தில்  ஏற்படும் சிக்கல் பதிவு மற்றும் விநி யோக முறை பற்றியது மட்டுமல்ல.  அதன் நாடி நரம்புகள் வழியாக ஊழலும் ஓடிக் கொண்டிருக்கிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள  குடும்பங்களுக்கு ஐந்து கிலோ அரி சியைப் பெற உரிமை இருந்தாலும்  நான்கு கிலோ மட்டுமே வழங்கப்  படுகிறது. அதுவும் தரமான அரிசி  அல்ல. உஸ்மா என்ற தரம் குறைந்த ரகமே விநியோகிக்கப்படுகிறது. கோதுமையை கண்ணில் காட்டு வதே இல்லை.

சட்டப்பூர்வ அடிப்படையற்ற ஆவணம்

ஆவணங்களின் அடிப்படை யிலோ அல்லது ஆன்லைனிலோ ரேஷன் அட்டை பதிவு செய்யலாம்.விண்ணப்பங்களுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதாரம் தரப்பட  வேண்டும் ஆன்லைனில் விண்ணப்  பிக்கும் பொழுது, ‘சாரி’ இருப்பிடம்  மற்றும் வருமானம் குறித்த சான்றி தழ்கள் தேவை. இரண்டு முறைகளி லும் இந்த சான்றிதழ்கள் அவசியமா னதாக கேட்கப்படுகிறது.  பீகாரில் ஆவணங்கள் கேட்கப்  படுவதில்லை. உ.பி, ஜார்க்கண் டில் வருமானச் சான்றுகளும், மத்  தியப்பிரதேசத்தில் வசிப்பிடச் சான்  றிதழும் தேவை. 2013 ஆம் ஆண்டின்  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்  திலோ (National Food Security  Act, 2013) அல்லது 2015 பொதுவிநி யோகத் திட்ட கட்டுப்பாட்டு ஆணை  விதிமுறையிலோ இத்தகைய ஆவ ணங்கள் தேவை என்பது இடம் பெற வில்லை.ஆன்லைனில் விண் ணப்பிக்கும் பொழுது ஒரு மேற்பார்  வைக்காக இவை தேவை என பீகா ரில் உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறையின் அதிகாரி ஒருவர்  கூறுகிறார். டிஜிட்டல் மோகம், மின்னணு மயம் என்ற வெறித்தனமான வேகத்  தில் மக்கள் நலனும் நிர்வாக நெறி முறைகளும் காற்றில் பறக்க விடப்  படுகின்றன.

தீவிரமாகும் சுரண்டல்

அமைப்பு ரீதியிலான குறை பாடுகளை உணர்ந்த பிறகும் கூட  அரசாங்கங்கள் எவ்விதமான தீர்வையும் நோக்கி நகரவில்லை.  ஆனால் அதிகார துஷ்பிரயோகத் தில் மக்கள் நசுக்கப்படுவது தொடர்கிறது. அதிகார வர்க்கத்தின்  இந்த பெருமிதம் சந்தையில் சுரண்  டலை தீவிரப்படுத்தும் சூழலை உரு வாக்கியுள்ளது. ஆன்லைன் செயல்முறை குறித்தும் ஆவணங்கள் குறித்தும் எவ்வித விழிப்புணர்வுமற்ற முசா ஹர் சமூகத்தினர் சிறிய அளவிலா வது நன்மையைப் பெற முயல் கின்றனர்.ரேஷன் அட்டை பெற 3  ஆயிரம் ரூபாய் வசூல் செய்து அவர்  களை ஏமாற்றும் இடைத்தரகர் களும் பெருகிவருகின்றனர். ரேசன் அட்டையும் கிடைப்பதில்லை. இடைத்தரகர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுப்பதில்லை. நவீன தாராளமாய காலத்தில் இது  மிக இயல்பானதாக மாறிவிட்டது.

ரேஷன் அட்டைக்கு உத்தரவாதம் இல்லை!

இப்படி எண்ணற்ற தில்லு முல்லுகளுக்கு நடுவே மக்கள் விண்ணப்பித்தால் ரேஷன் அட்டை  எப்படியும் அவர்களுக்கு கிடைக் கும் என்பதற்கு எந்த விதமான உத்  தரவாதமும் இல்லை. விண்ணப் பித்த 30 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்கப்பட வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டின் பொது விநியோகத் திட்ட ஆணை குறிப்  பிடுகிறது.நான்கு முதல் 18 மாதங் கள் கடந்த பின்பும் கூட ரேஷன் அட்டை வழங்கப்படாததால் நிலு வையில் உள்ள வழக்குகள் நிறை யவே உண்டு. மக்கள் கழுத்தை நெரித்து! ஒரு மனிதனின் அன்றாட அத்தி யாவசியத் தேவைகளுக்காக மட்டு மல்ல, அதையும் கடந்து அவனு டைய வாழ்வாதாரத்திற்கு அடிப்ப டையானது பொது விநியோக முறை. இந்திய சிவில் உரிமை கழ கம் எதிர் இந்திய அரசு வழக்கில் உணவு என்பது அடிப்படை உரிமை யாக அங்கீகரிக்கப்பட்டு 24 ஆண்டு கள் கடந்துவிட்டன. ஆனாலும் அர சாங்கங்கள் தங்களின் அதிகார கயிற்றை கழுத்தைச் சுற்றி இறுக்கி  ஏழை மக்களை மூச்சு திணறடித்து வருகின்றன. கட்டுரையாளர்கள்: டிவைஸ் (DEVISE) அறக்கட்டளையின் கள ஆய்வாளர்கள். நன்றி: தி இந்து தமிழில்: கடலூர் சுகுமாரன்