கோழிக்கோடு பெண்களின் பாதுகாப்பு தொடர் பான விஷயங்களில் எதிர்க்கட்சி களும் ஊடகங்களும் சுயநல நோக்கத்துடன் செயல்படுவதாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோழிக்கோடு மாவட்டக் குழு அலுவலகமான கேப்டன் லட்சுமி நினைவ கத்தை திறந்து வைத்து அவர் மேலும் பேசி யதாவது: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த வாளையார் வழக்கில் இந்த அணுகுமுறை தெளிவாகிறது. எதிர்தரப்பில் உள்ளவர் களின், சாதியையோ மதத்தையோ பதவி யையோ பார்க்காமல், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில், இடது ஜனநாயக முன்னணி அரசு உறுதி யாகச் செயல்பட்டது. ஆனால் நீதிக்காக. அல்லாமல், சுயநல அரசியல் நோக்கத்துடன். எதிர்க்கட்சி செயல்பட்டது. நீதிக்கான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் அரசியல் உள் நோக் கத்துடன் ஊடகங்கள் செய்தியை வழங் கின. பாலியல் வழக்கில் குற்றவாளி களுக்கு, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கும் நிகழ்வுகளில் பெண்களின் பாது காப்புக்கு தேவையான போராட்டங்களும் தலையீடுகளும் வலுவாக நடக்க வேண்டும். விவசாயப் பணிகளில் ஆணுக்கும் பெண் ணுக்கும் சரிசமமான ஊதியம் கிடைப்பதை உறுதிப்படுத்தும் பண்பு உருவாக வேண் டும் என பிருந்தா காரத் கூறினார்.